November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2022 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெற ஆளும்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல்

இலங்கையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான கலந்துரையாடல் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்பில் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் முன்மொழிவுகள் இந்தக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன.

உள்நாட்டு சேதன விவசாயத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதி உற்பத்தியை அதிகரித்தல், தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் கிராமப்புற சமூகத்தின் பங்களிப்பு மற்றும் பாரம்பரிய தொழில்முனைவோரை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், மீன்வளத் துறையை விரிவுபடுத்துதல், மலர் மற்றும் அலங்கார இலை வளர்ப்பாளர்கள், விலங்கு உற்பத்தி துறை ஆகியவற்றை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பின்வரிசை உறுப்பினர் இதன்போது முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.