
மன்னார் இலுப்பைக்கடவை – கூராய் பகுதியில் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பகுதிக்கு கடத்துவதக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் மொத்தப் பெறுமதி 3 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ள பொலிஸார், அந்த கஞ்சா பொதிகளை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.