இலங்கையின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரமாளவில் இந்த மாற்றம் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கல்வி, சுகாதாரம், வெளிவிவகாரம் மற்றும் ஊடகத்துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி தற்போது பவித்திரா வன்னியாராச்சி வகிக்கும் சுகாதார அமைச்சுப் பதவி வைத்தியர் ரமேஷ் பத்திரனவுக்கும், தினேஸ் குணவர்தன வகிக்கும் வெளிவிவகார அமைச்சுப் பதவி ஜீ.எல்.பீரிஸுக்கும், கெஹலிய ரம்புக்வெல்ல வகிக்கும் ஊடகத்துறை அமைச்சுப் பதவி டலஸ் அழகப்பெருமவுக்கும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது புதிதாக சிலருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.