January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு இலங்கை தயாராகிறது’: அரசாங்கம்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வுக்கு இலங்கை தயாராகி வருவதாக இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

ஐநா அமர்வை எதிர்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல்களை இலங்கை வெளியுறவு அமைச்சும் தூதுவர்களும் ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐநா அமர்வை எதிர்கொள்வது தொடர்பாக இலங்கை ஒரு நாடாக, உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரவையின் முதல் நாள் அமர்வில் இலங்கை விவகாரம் கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கையில் உண்மையான நிலவரங்கள் ஐநா அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக தீர்வின்றி இழுத்துச் செல்லப்படும் காரணிகள் மற்றும் இலங்கையுடன் தொடர்பில்லாத கவலைகள் குறித்து ஐநா அமர்வில் வெளிப்படையாக கலந்துரையாடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.