May 24, 2025 19:12:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ- நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் சந்திப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.