January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்தில் புதிய இடம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

2400 சடலங்களை அடக்கம் செய்ய முடியுமான விதத்தில் 3 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிலப் பகுதி கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமானது என அம்பாறை மாவட்ட செயலாளர் அறிவித்ததைத் தொடர்ந்து, மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவு அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி அடக்கஸ்தளத்தில் மேலும் 300 சடலங்களை அடக்கம் செய்வதற்கான இட வசதியே காணப்படுவதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.