கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமது நிறுவனத்தின் கணக்காளர் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், சாரதி ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அங்கு குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதுடன், அங்கு தொற்று நீக்கும் பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.