January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலையை அறிவித்தது அரசாங்கம்

இலங்கையின் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் விலை நிர்ணயம் இன்றி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் இவ்வாறு நிர்ணய விலையை அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பிசிஆர் பரிசோதனை ஒன்றுக்கான அதிகூடிய விலையாக 6,500 ரூபாயும் அன்டிஜன் பரிசோதனை ஒன்றுக்கான விலை 2,000 ரூபாயாகவும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.