File Photo: Facebook/Kandy Esala Perahera 2K21
கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை இம்முறை மக்களின் பங்குபற்றுதல் இன்றி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் திலங்கதெல தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதலாவது கும்பல் பெரஹராவின் வீதி ஊர்வலம் ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து 18 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு ரந்தொலி பெரஹரா ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன் அதன் இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 22 ஆம் திகதி இடம்பெறும் என்று தியவடன நிலமே பிரதீப் திலங்கதெல தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் 23 ஆம் திகதி நீர்வெட்டு நிகழ்வு நடைபெற்று பெரஹரா நிறைவடையும் என்றும், இந்தக் காலப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும். சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றி பெரஹரா நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.