இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை என்று துபாய் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், உகண்டா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் துபாய் அறிவித்துள்ளது.
எனினும் குறித்த நாடுகளில் இருந்து துபாய்க்கு வரும் போது, முற்பதிவுகளை செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் நுழையும் போது அன்டிஜன் பரிசோதனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் துபாய் எமிரேட்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.
துபாய் விசா வைத்துள்ள வெளிநாட்டவர்களைத் தவிர ஏனையோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.