May 30, 2025 12:05:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவில் இருந்து மேலும் ஒருதொகை ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தன

ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒருதொகை ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகள் இலங்கை வந்தன.

இவ்வாறாக 15,000 தடுப்பூசிகள் இன்று காலை எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசிகள் பாதுகாப்பாக கொழும்பிலுள்ள மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் மூன்று கட்டங்களாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.