ஜனாதிபதியின் பொது மபொது மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் அவர் கடந்த ஜூன் 24 அன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.