July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் 200 பேர் மரணம்’

கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் என சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,நாளாந்த கொவிட் மரணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில், இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தை சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் என்பதுடன், கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும், இரண்டு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80 வீதமான கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது என்பதும்,இந்த கொவிட் மரணங்கள் அனைத்துமே தடுப்பூசி ஏற்றாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்..