உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு,கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்களுக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.
25 சந்தேக நபர்கள் மீதும் 23,270 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.