இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இதன்படி, நேற்றைய தினத்தில் நாட்டில் 118 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் நாட்டில் இன்று 2904 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 335,851 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.