July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இருந்து செப்டம்பரில் வெளியேறலாம்’: இலங்கை உயர் ஸ்தானிகர் நம்பிக்கை

பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இலங்கை வெளியேறலாம் என்று லண்டனுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனின் ட்ரவல் வீக்லி இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே இலங்கை உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டது.

நாடு ஏதாவது ஒரு சவாலைக் கடந்து செல்லும் போது, அது எதிர்கால விடயங்களுக்கு சிறப்பாகத் தயாராகுவதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், விரைவாக மீண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 20 ஆயிரம் பிரிட்டிஷ் பிரஜைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் வழமைக்குத் திரும்பியதுடன் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு இலங்கை சிறந்த பயண அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் நீண்ட காலம் தங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.