
திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடு அமுலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் ஒழுங்குவிதிகள் இரத்தாகும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
திருமண மண்டபங்களின் ஆசன எண்ணிக்கை 500 க்கும் அதிகமாக காணப்பட்டால் 150 பேருக்கும், ஆசன எண்ணிக்கை 500 க்கும் குறைவாக காணப்பட்டால் 100 பேருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் நாட்டில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் மேலும் தீவிரமடைந்துள்ளதால், அந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.