இலங்கையில் 2017 ஆம் ஆண்டு முதல் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த 40 சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் சடலங்களை வைக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்ட போது, சுகாதாரத்துறையினர் இதுகுறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருந்தனர்.
இந்நிலையில், உரிமை கோரப்படாத சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசியமான சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றி குறித்த 40 சடலங்களையும் ஓட்டமாவடி கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மையவாடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.