January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வாக்குமூலங்கள் பெறப்பட்டுவரும் நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று (10) அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.