யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ரஜுவ்காந்த், கிருபாகரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை அரசியல் பழிவாங்கல் காரணமாக நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் அராஜக செயல்பாட்டை கண்டித்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம்,முதல்வர் திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டுள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தமக்கான உரிய தீர்வு விரைந்து கிடைக்காதவிடத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.