இலங்கையில் நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஒரு இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார்.
நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்வோருக்கான அபராத தொகை 2500 ரூபாயில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது.
நெல் வியாபார மோசடியில் ஈடுபடுவோர் இவ்வாறு அபராத தொகை அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்தாலும், தாம் அபராதம் விதிப்பது உறுதி என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.