உலகில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருத்துவ நிபுணர் மேக் டோஹேர்டி தெரிவித்துள்ளார்.
உலக தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் எச்ஐவி தொற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர் மேக் டோஹேர்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
எச்ஐவியுடன் வாழ்பவர்களுக்கு கொரோனா தொற்று பல்வேறு ஆபத்து நிலைகளை ஏற்படுத்தி விடுவதை தரவுகள் குறித்தி நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் இதுதொடர்பாக அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
தற்போது பாவனையில் உள்ள தடுப்பூசிகள் எச்ஐவியுடன் உள்ளவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாக மேக் டோஹேர்டி சுட்டிக்காட்டியுள்ளார்.