
இலங்கையில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 24 வருட காலமாக நிலவும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படும் வரை பணிக்கு திரும்புவதில்லை என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரனதுங்க, மகிந்த அமரவீர மற்றும் டளஸ் அலகப்பெரும ஆகியோரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை உப குழு, ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.