July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை என்கிறார் ஹர்ஷ டி சில்வா

இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டுள்ளது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பொருளாதாரத்தை நிலைநிறுத்த இலங்கைக்கு 10 பில்லியன் டொலர்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

சீனா இலங்கைக்கு உதவ வேண்டும் என்றால், தற்போதைய நிலையில் உள்ள பொருளாதாரத்தை நிலைநிறுத்த இலங்கைக்கு குறைந்தபட்சம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும். சாம்பியாவுக்கு சீனா நிதி உதவி செய்தபோது, ​சாம்பியாவால் சீனாவுக்கு அந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டபோது பதிலுக்கு, தங்கம், வெள்ளி, மற்றும் சில அந்நாட்டின் வளங்களை சீனா தருமாறு கேட்டுக்கொண்டது.

ஒரு திட்டம் இருந்தால், அல்லது ஒரு மாற்று வழி தொடர்பில் முடிவு செய்யப்பட்டால், அரசாங்கம் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்.இலங்கை மக்களின் வாழ்க்கையில் சுமைகளை சமத்துவத்தை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.

சீனா எங்களுக்கு உதவி செய்தால், திருப்பி கொடுப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.