January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்

யாழ்ப்பாணம்,தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் செவ்வாய்க்கிழமை (10) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22 ஆம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவு பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

ஆலய பரிபாலன சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக மாவட்ட சுகாதார அதிகாரி வலி.வடக்கு
பிரதேச செயலாளர்,வலி.வடக்கு பிரதேச சபை தலைவர்,அரச அதிபர் ஆகியோர் வழங்கிய ஆலோசனைக்கு
அமைய சமூகப் பொறுப்புடன் மஹோற்சவ காலம் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா யாவும் உள்வீதியில் மட்டுமே நடைபெறும்.உபயகாரர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர்.உள்வீதியில் மட்டும் சுவாமி வீதிவலம் வருதல் இடம் பெறும். ஆலய வெளி வீதியில் தரிசிக்க வரும் பக்தர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி சுகாதார விதிகளைப் பேணி வழிபாடு செய்தல் வேண்டும்.

இயன்றவரை சிறுவர்கள்,முதியோர்கள் வீட்டில் இருந்து
வழிபாடு செய்யுங்கள். காவடி நேர்த்திகள்,வீதிப்பிரதிஷ்டை தவிர்க்கப்பட்டுள்ளது.வியாபார நிலையங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.

இயன்றவரை மிக அமைதியாக அம்பாளின் திருவிழா நடைபெற
அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.