இலங்கையில் 18 முதல் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் 18 முதல் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கொழும்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரம் பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி குறித்து நிலவும் பல்வேறு மூட நம்பிக்கைகள் காரணமாக இவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாகவும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.