இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு கொள்வனவுக்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருப்பதைக் காணக்கிடைத்தது.
இலங்கையின் பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களில் ஒன்றான லாப்ஸ், அதன் இறக்குமதிகளை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், லிட்ரோ எரிவாயுயைப் பெற்றுக்கொள்வதிலும் சிரமம் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுடன் வரிசையில் நிற்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.