July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 100 ஐ கடந்தது தினசரி கொவிட் மரணங்களின் எண்ணிக்கை!

இலங்கையில் நேற்று (08 ) 111 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டில் பதிவான அதி உயர் தினசரி கொவிட் உயிரிழப்பு இதுவாகும்.

56 ஆண்களும் 55 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,222 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று  (09) மாலை வெளியான அறிக்கையின்படி, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,928 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 31,922 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 31,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 95,518 ஆக உயர்வடைந்துள்ளது.