January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பதவியேற்றார்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கடமைகளை பொறுப்பேற்றார்.

பல்கலைக்கழகத்திலுள்ள உபவேந்தர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இவரின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழக மூத்த நிர்வாகிகள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் இவர், அதே பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராவார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர், விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதியாக இறுதியாக கடமையாற்றியிருந்தார்.

சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது 43 ஆவது வயதில் பல்கலைக்கழக உபவேந்தராக பதவியேற்றுள்ளார்.