இலங்கையில் பாடசாலைகளை செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதும் சந்தேகமாக இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை செப்டம்பர் மாதம் முதலாம் வாரம் ஆரம்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டவாறு பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வருடத்துக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையிலும், ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பைத் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.