இலங்கையின் மேல் மாகாணத்தில் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1500 ஐ அண்மித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1491 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று 852 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அது ஆபத்தான நிலையாகும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், நேற்று களுத்துறை மாவட்டத்தில் 320 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 319 பேரும் கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று 2961 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸின் தாக்கத்தால் மேல் மாகாணத்தில் கொரோனா பரவல் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.