இரவு நேரங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது முச்சக்கர வண்டி சாரதிகள் கொள்ளையர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டியொன்றில் ஏறிய இருவர் அந்த முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே பொலிஸார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு கூறப்பட்ட பின், அந்த இடத்திற்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பகுதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுபோன்று குற்றச் செயல்களின் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் பயணிகள் போன்று உங்களின் முச்சக்கர வண்டிகளில் ஏறலாம் என்றும், இதனால் பயணிகளை ஏற்றும் போது இது தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசிமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.