
இலங்கையின் அரச வைத்தியசாலை குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாமல் உள்ள சடலங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற சுகாதார தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா அல்லாத காரணங்களால் மரணித்த பலரது சடலங்களும் உரிமை கோரப்படாமல் வைத்தியசாலை குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதால், சுகாதாரத்துறையினர் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சடலங்களின் டிஎன்ஏ மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக களுபோவில வைத்தியசாலையில் குவிந்திருந்த சடலங்கள் உறவினர்களால் உரிமை கோரப்படாமல், கைவிடப்பட்டவையே என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு குவிந்துள்ள சடலங்களை தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வது தொடர்பாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.