January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்விசார் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான முடிவில் மாற்றம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பணிக்கு அழைப்பதற்கான முடிவை மாற்றியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனைத்து கல்விசார் அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கொவிட் தொற்று வேகமாக பரவல் அடைவதையடுத்து ஆசிரியர்களை வீட்டிலிருந்தே கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் வீட்டிலிருந்து கடமையாற்றும் காலத்தில் ஒன்லைன் முறை அல்லது பிற மாற்று முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடுள்ளார்.

எவ்வாறாயினும்,ஆசிரியர்களின் தலைமையாசிரியர் சங்கங்கள் தங்கள் சம்பள விவகாரத்துக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தை தொடரும் என்று கூறுகின்றன.

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நேற்று (07) முதல் நிறுத்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

எனினும் போராட்டம் குறித்த இறுதி முடிவு நாளை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.