January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் தடுப்பூசியி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ​மேல் மாகாணத்தில் கடும் நோயுடன் கூடியவர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பூசி ஏற்றிக் கொள்பவர்கள் 1906 என்ற இலக்கத்திற்கு அழைத்து முன் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.