நாட்டில் கொவிட் பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு சென்றுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் பதிவாகும் தினசரி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் அவர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்பும் வேலையை மேற்கொண்டு வருவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதன் காரணமாக தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது, கம்பஹா உட்பட சில மாவட்டங்களில் தினமும் 1,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், தொற்று நோயியல் பிரிவின் தினசரி தொற்று அறிக்கைக்கும் பொது சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்படும் தரவுகளுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.