இலங்கை – இரத்தினபுரி, பெல்மடுல்லவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீல இரத்தினக்கல்லான ‘செரண்டிபிட்டி சபெயார்’ சீனாவின் இரத்தின கல் ஏலத்தில் விற்கப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சீனாவின் ஷங்காயில் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக புகழ் பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் இந்த கல் ஏலத்தில் விடப்பட உள்ளது.
இதை கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி விசேட விமானமொன்றை வழங்கியுள்ளதாக இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் துறை அமைச்சர் லோகன் ரத்வத்த தெரிவித்தார்.
510 கிலோ கிராம் எடையுடைய இந்த வெளிர் நீல நிற இரத்தினக்கல் 2,000 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இரத்தினக் கல்லின் விற்பனை பெறுமதியிலிருந்து 10 சதவீத பணத்தை அரசு பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த இரத்தினக்கல் கொத்தணியின் பெறுமதி தொடர்பாக முரண்பட்ட கருத்துக்களை இரத்தினக்கல் துறைசார் நிபுணர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.