Photo: Facebook/ Vimukthi Kumaratunga
தனது மகன் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்குள் நுழையவுள்ளதாக வெளியாகும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிராகரித்துள்ளார்.
விமுக்தி குமாரதுங்க இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்து சந்திரிகா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகனுக்கு அரசியலில் நுழைய ஆர்வமோ விருப்பமோ இல்லை என்றும் பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய முறையாக அரசியல் மட்டும் இல்லையென்றும், இதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாமென்று மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.