May 24, 2025 23:27:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் மன்னார் ஆயரால் திறந்து வைக்கப்பட்டது

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கொக்குப்படையானில் இந்த கிறிஸ்தவ தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்றைய தினம் மன்னார் மறை மாவட்ட ஆயர், அபிஷேகம் செய்து திறந்து வைத்தார்.

கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் அஞ்சலோ தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.