July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் ஏற்பாட்டில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு சங்கிலியன் அரண்மனை, அதன் நுழைவாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தற்போது இவற்றை செய்து முடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநாகர முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விரைவில் இவற்றிற்கான கட்டட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது தமிழ் உணர்வாளர்கள் அனைவரினதும் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் மாநாகர முதல்வரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்துடனான இந்தக் கலந்துரையாடலில் அதன் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம், செயலாளரான மருத்துவ பீட பதிவாளர் ரமேஷ், மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன், புனர்நிர்மாண அலுவலர் கபிலன், மாநகர சபை உறுப்பினர்களான பார்த்திபன், தனுயன் மற்றும் கண்டியில் இருந்து வருகை தந்த பட்டய கட்டட கலைஞர் ஹேரத், அளவை அளவையியலாளர் சரத் சத் குமார, தொல்லியலாளர் மைத்திரிபால, மூத்த புனர்நிர்மாண அலுவலர்களான பண்டாரநாயக்க, மெத்தானந்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.