தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இலங்கையின் கொழும்பில் நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்று மாலை இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் கலைஞர் கருணாநிதியினால் இயற்றப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன், அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பேருரையும், விசேட உரையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.பி. குருசாமி, குமர குருபரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயசந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு அமைப்பாளர் திரு.கே.செல்லசாமி மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.