
இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் நேற்று வடல்கும்புர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
25 வயதுடைய குறித்த சந்தேக நபரால் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் தொடர்பான 500 ற்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதவியேற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் கொழும்பு நீதவரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை இவ்வாறான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றும் மேலும் 10 பேர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.