July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு வைத்திய நிபுணர்கள் அறிவுரை!

சிறுவர்களை அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து ஏனைய சந்தர்ப்பங்களில் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு சிறுவர் வைத்திய நிபுணர் பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் சன்ன பெரேரா இதனை தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு, வழமைக்கு மாறான விதத்தில் காய்ச்சல், இருமல், வாசனை அல்லது சுவை இழப்பு வயிற்றுப்போக்கு, குமட்டல், உடலில் கொப்புளங்கள் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமானால் வைத்தியரை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னர் நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 சிறுவர்களே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது இந்த எண்ணிக்கை 2 முதல் 3 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக கொழும்பு சிறுவர் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவு நிரம்பியுள்ளதாக தெரிவித்த அவர், எனினும் தற்போதைய நிலையை சமாளிக்க மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.