July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா மரணங்கள் ஐயாயிரத்தை தாண்டியது!

இலங்கையில் மேலும் 98 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5,017 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று (07) மாலை 6 மணி வரை 1820 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 26,043ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 30,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 90,794 ஆக உயர்வடைந்துள்ளது.