July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் இருந்து அடுத்த தொகுதி ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

ஜப்பானில் இருந்து மேலும் 728,000 டோஸ் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகள் இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் இந்த தொகுதி இன்று (07) மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த தடுப்பூசி தொகுதி “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் கூறினார்.

தமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1.4 மில்லியன் “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதாக ஜப்பான் உறுதியளித்தது.

இதற்கு அமைய முதல் தொகுதியாக 728,460 “அஸ்ட்ரா செனெகா” கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கடந்த சனிக்கிழமை(31) நாட்டை வந்தடைந்தன.

இந்த நன்கொடையின் பயனாக ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசியின் இரண்டாவது டோஸூக்காக காத்திருந்த 4 90,000 பேருக்கு தடுப்பூசியை மீண்டும் வழங்க முடிந்தது.