
கொழும்பில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர்.
இலங்கை இராணுவம் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பித்ததைத் தொடர்ந்தே, மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள ஒன்றுதிரண்டுள்ளனர்.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இராணுவத்தினர் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி சேவையில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் முதலாவது டோஸையும், முதலாம் டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.