
கொழும்பு டாம் வீதியில் உள்ள ‘டயமன்ட் கொம்ப்லெக்ஸ்’ கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்பு பிரிவின் 8 தீயணைப்பு வாகனங்கள் இந்த தீப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்வதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.