
File Photo
கொழும்பில் இதுவரையில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
அத்தோடு இதுவரை கொழும்பு நகரத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுகததாச விளையாட்டு அரங்கிற்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.