
நாட்டின் கொரோனா நிலைமையைக் கருத்திற்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடையும் நிலையில், அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவல் அபாயம் மிக மோசமாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நியாயமான காரணங்கள் இருந்தாலும், தொற்று நோய்ப் பரவலின் போது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது நியாயமானதாக அமையாது என்று அமைச்சர் வீரசேகர தெரிவித்துள்ளார்.