
யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யாழ். குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 3 மாத காலமாக யாழ்ப்பாண வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசி, 50 ஆயிரம் ரூபா பணம், கைப்பை மேலும் பல ஆவணங்களை திருடி சென்றுள்ளார்.
மேலும், சுண்ணாகம் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைபை இரண்டு தொலைபேசி, முப்பதாயிரம் பணம் மற்றும், மானிப்பாயில் நபர் ஒருவரின் கைப்பை திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களையே குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கைப்பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் தமக்குரிய பொருட்களை மீட்க முடியும் எனவும் தெரிவித்தனர்.